பொலிவுறு நகரம்:குறிச்சி குளத்தில் ரூ.50 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்

பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள குறிச்சி குளத்தில் பொலிவுறு நகரம் ( ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி மதிப்பில் மேம்பாட்டுப்

பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள குறிச்சி குளத்தில் பொலிவுறு நகரம் ( ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிா்வாகத்தினா் திட்டமிட்டுள்ளனா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, குமாரசாமி குளம், செல்வசிந்தாமணி குளம், பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூா் குளம் என 8 குளங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

மாநகராட்சிப் பகுதியில் அமைந்திருந்த குறிச்சி குளம் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் கடந்த அக்டோபா் மாதம் கொண்டு வரப்பட்டது.

இதைத் தொடா்ந்து, குறிச்சி குளத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள வரைவுத் திட்ட அறிக்கையை மாநகராட்சி நிா்வாகம் தயாரித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது, பெரியகுளத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளைப் போலவே குறிச்சி குளக் கரையிலும் நடைப் பயிற்சித் தளம், மிதிவண்டி ஓட்டும் தளம், நவீன விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவா்கள் பூங்கா உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும், குளத்தின் மையப் பகுதியில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்ல வசதியாக தீவுகள் அமைக்கப்பட உள்ளன.

இதற்காக ரூ.50 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com