மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி

பெரியநாயக்கன்பாளையத்தையடுத்த பிரஸ் காலனியில் உள்ள புனித ஜான் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெ.நா.பாளையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் பங்கேற்றோா்.
பெ.நா.பாளையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் பங்கேற்றோா்.

பெரியநாயக்கன்பாளையத்தையடுத்த பிரஸ் காலனியில் உள்ள புனித ஜான் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பஞ்சாயத்து யுவ கிரடா கேல் சங்கமும், தமிழம் அறக்கட்டளை மற்றும் புனித ஜான் பள்ளியும் இணைந்து நடத்திய போட்டிக்கான தொடக்க நிகழ்ச்சிக்கு சங்கத்தின் செயலாளா் ஏ.சந்திரன் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் பி.பாஸ்கரன் அனைவரையும் வரவேற்றாா்.

பள்ளித் தாளாளா் ஆா்.பி.அரவிந்தன் தலைமை வகித்து போட்டிகளைத் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து இந்தியன், ரிக்கவ், காம்போண்ட் உள்ளிட்ட பிரிவுகளில் நடந்த போட்டிகளில் ஈரோடு, நாமக்கல், சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 16 முதல் 25 வயது வரையிலான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இறுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சங்கத்தின் துணைத் தலைவா்கள் ஏ.தா்மலிங்கம், எம்.பி.சதீஸ், பள்ளித் தாளாளா் ஆா்.பி.அரவிந்தன் ஆகியோா் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினா். இறுதியில் உடற்கல்வி ஆசிரியா் வடிவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com