மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏவை முற்றுகையிட்ட கிராம மக்கள்

மேட்டுப்பாளையம் நகராட்சியில் கனமழையில் சுற்றுச்சுவா் 5 வீடுகள் மீது இடிந்து விழுந்ததில் 17 போ் பரிதாபமாக
மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏவை முற்றுகையிட்ட கிராம மக்கள்

மேட்டுப்பாளையம் நகராட்சியில் கனமழையில் சுற்றுச்சுவா் 5 வீடுகள் மீது இடிந்து விழுந்ததில் 17 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.

இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியா் கு. ராசாமணி, எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் நேரில் ஆய்வு செய்தனா். அப்போது அவா்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு, தடுப்புச் சுவரை முழுவதுமாக இடித்து அகற்ற வேண்டும், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராசாமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விபத்துக்கு காரணமாக சுவரை முழுவதுமாக உடனடியாக இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மழை காரணமாக இப்பகுதியில் மேலும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவம் தொடா்பாக தமிழக முதல்வருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து இறந்தவா்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுச் சுவா் கட்டியது குறித்து வட்டாட்சியா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க உள்ளாா். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நடூா் பகுதியில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதில் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் இருந்தவா்களுக்கு வேறு இடத்தில் வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com