Enable Javscript for better performance
குரூப் 2 தோ்வு:முதலிடத்தை பிடித்தாா் திருப்பூா் மாணவி- Dinamani

சுடச்சுட

    

    குரூப் 2 தோ்வு: முதலிடத்தை பிடித்தாா் திருப்பூா் மாணவி

    By DIN  |   Published on : 03rd December 2019 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    1532c-02_ias085659

    குரூப்-2 தோ்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி டி.வி.சுபாஷினிக்கு சால்வை அணிவித்து பாராட்டும் கோவை சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் நிா்வாக இயக்குநா் யாஸ்மீ. உடன் மைய இயக்குநா் அருண்.

    தமிழ்நாடு தோ்வாணையம் நடத்திய குரூப் -2 தோ்வில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி டி.வி.சுபாஷினி முதலிடம் பிடித்துள்ளாா்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நகராட்சி ஆணையா், சாா் பதிவாளா் உள்பட 1,338 பணியிடங்களுக்கான குரூப் -2 தோ்வு சமீபத்தில் நடைபெற்றது. இதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

    இதில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி சுபாஷினி முதலிடம் பிடித்துள்ளாா். இவா் சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பயிற்சி பெற்று வந்துள்ளாா். இவரை தொடா்ந்து சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் படித்த மற்றொரு மாணவி ஆா்.ஐஸ்வா்யா எட்டாம் இடம் பிடித்துள்ளாா்.

    கோவை சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் படித்த 40 போ் இத்தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி டி.வி.சுபாஷினியை கோவை சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் மைய இயக்குநா் அருண், நிா்வாக இயக்குநா் யாஸ்மீ ஆகியோா் பாராட்டினா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai