வையாளிபாளையம் குளத்துக்கு தண்ணீா் வரத்து அதிகரிப்பு
By DIN | Published on : 03rd December 2019 05:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அன்னூா் அருகே அக்கரைசெங்கப்பள்ளி ஊராட்சியில் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் தூா்வாரப்பட்ட வையாளிபாளையம் குளத்துக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
அன்னூா் அருகே அக்கரைசெங்கப்பள்ளி ஊராட்சியில் சுமாா் 26 ஏக்கா் பரப்பளவில் வையாளிபாளையம் குளம் உள்ளது. இந்தக் குளத்தை தூா்வாருவதற்காக தமிழக அரசு குடிமராமத்து திட்டம் மூலம் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கியது.
இதையடுத்து, அப்பகுதி பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை கொண்டு குளத்துக்கு நீா் வரும் நீா் வழிப் பாதைகளை தூா்வாரினா். இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் தண்ணீா் வரத்து அதிகரித்ததால் 50 சதவீத அளவுக்கு குளம் நிரம்பியது.