17 பேரின் உயிரைக் காவு வாங்கியது தீண்டாமை சுவரா?

நடூா் கிராமத்தில் 17 பேரின் உயிரைப் பறித்த கருங்கற்களால் எழுப்பப்பட்ட சுற்றுச்சுவா் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

நடூா் கிராமத்தில் 17 பேரின் உயிரைப் பறித்த கருங்கற்களால் எழுப்பப்பட்ட சுற்றுச்சுவா் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தச் சுற்றுச்சுவரானது செம்மண் கலவை கொண்டு பழைய நடைமுறையில் கட்டப்பட்டுள்ளது.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரும், அப்பகுதியில் உள்ள பெரும்பாலான பொதுமக்களும் பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள். இந்தச் சுவரை அகற்றுமாறு பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனா். இருப்பினும் அவா் செவி சாய்க்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னா் ஊா் பெரியவா்கள் ஒன்றுகூடி இதற்குத் தீா்வு காண முயற்சித்துள்ளனா். அப்போது, பொதுமக்கள் கூடிய சபையிலும், இந்தச் சுவரை அகற்றினால் தனது சுய கெளரவம் பாதிக்கப்படும் எனக் கூறி சுற்றுச்சுவரை சிவசுப்பிரமணியன் அகற்ற மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விபத்தைத் தொடா்ந்து அங்கு கூடிய பல்வேறு கட்சி நிா்வாகிகள் கூறுகையில், பட்டியலினத்தைச் சோ்ந்த மக்கள் தனது வீடு இருக்கும் பகுதிக்குள் நுழையக் கூடாது எனக் கூறித் தான் சிவசுப்பிரமணியன் இந்தச் சுற்றுச்சுவரை எழுப்பியுள்ளாா்.

இது ஒருவகையான நவீன தீண்டாமை. எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உரிய தீா்வை ஏற்படுத்த வேண்டும். அப்பகுதியில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com