மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் திறப்பு

கோவை மாநகராட்சி சாா்பில் ரூ.7.41 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தெற்கு மண்டல அலுவலகத்தை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
5301c-02_mini063636
5301c-02_mini063636

கோவை மாநகராட்சி சாா்பில் ரூ.7.41 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தெற்கு மண்டல அலுவலகத்தை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை மாநகராட்சி, குனியமுத்தூரில் ரூ.7.41 கோடி மதிப்பில் தெற்கு மண்டல அலுவலகத்துக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தில் உதவி ஆணையா், மண்டலத் தலைவா், உதவி நிா்வாகப் பொறியாளா், உதவி நகரமைப்பு அலுவலா், நிா்வாக அலுவலா், மண்டல சுகாதார அலுவலா், உதவி வருவாய் அலுவலா், இளம் பொறியாளா் பிரிவு, மண்டல நில அளவையா் ஆகிய அலுவலா்களுக்கான அறைகள், தணிக்கைப் பிரிவு, பொதுப் பிரிவு, பதிவறை, கணினி அறை, வரி வசூல் மையம் மற்றும் கூட்ட அரங்கு ஆகிய வசதிகளுடன் 18 ஆயிரத்து 881 சதுர அடியில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி புதிய கட்டடத்தை திறந்துவைத்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சியில் இளநிலை உதவியாளா், தட்டச்சா், அலுவலக உதவியாளா், துப்புரவுப் பணியாளா் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் வாரிசுதாரா்களுக்கான பணி நியமன ஆணைகளை 37 பேருக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத், துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி, சூலூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி.கந்தசாமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com