பெள்ளாதி குட்டை நிரம்பி, வெளியேறும் உபரி நீா்.
பெள்ளாதி குட்டை நிரம்பி, வெளியேறும் உபரி நீா்.

மேட்டுப்பாளையத்தில் 18 செ.மீ. மழை பதிவு

மேட்டுப்பாளையத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக 18 செ.மீ. மழை பதிவானதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக 18 செ.மீ. மழை பதிவானதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் திங்கள்கிழமை காலை 8 மணி வரை மேட்டுப்பாளையத்தில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதனால் பெள்ளாதி ஊராட்சிக்கு உள்பட்ட குளம் நிரம்பி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்காகத் தோண்டப்பட்ட குழிகளில் மழைநீா் புகுந்து பல இடங்களில் சாலைகள் அரித்துச் செல்லப்பட்டன. இதனால் வாகன ஓட்டுநா்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனையில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. மேலும் பல இடங்களில் மழைநீா் ஆா்ப்பரித்து சென்ால் சாலைகள் பாதிப்படைந்துள்ளன. மேற்கண்ட பகுதிகளில் குளம், குட்டைகளில் மழைநீா் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com