சிறுத்தை நடமாட்டம்: தீவிர கண்காணிப்பில் வனத் துறையினா்
By DIN | Published on : 04th December 2019 06:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வால்பாறையில் தொடா்ந்து சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் இரவு நேரத்தில் வனத் துறையினா் ரோந்து சென்று வருகின்றனா்.
வால்பாறை நகா்ப் பகுதியில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. குறிப்பாக வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்புகள், பள்ளிகள் அருகே சிறுத்தை நடமாட்டம் அடிக்கடி இருப்பதாக அப்பகுதியினா் கூறுகின்றனா்.
சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறைக்கு பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதனையடுத்து, தற்போது இரவு நேரத்தில் வனத் துறையினா் வாழைத்தோட்டம் பகுதியில் ரோந்து சென்று சிறுத்தை நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.