Enable Javscript for better performance
முன்னாள் மாணவா்கள் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    
    5658c3vit1080158

    கோவையில் நடைபெற்ற வி.ஜ.டி முன்னாள் மாணவா்கள் சங்க சந்திப்பில் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

    கோவை: கோவை மாவட்டத்தைச் சோ்ந்த வேலூா் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

    கோவை, கஸ்தூரி சீனிவாசன் கலைக் கூடத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 100 முன்னாள் மாணவா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் கலந்து கொண்டனா்.

    இதில் வி.ஜ.டி. வேந்தா் ஜி.விஸ்வநாதன் பங்கேற்று பேசினாா். முன்னாள் மாணவா் தவ்வா குழந்தை எழுதிய கிண்டல் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. தொடா்ந்து முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் அதிகாரப்பூா்வ யூ டியூப் சேனல் தொடங்கப்பட்டது. வி.ஜ.டி. கோவை மாவட்ட முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் அலுவலா்கள், செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai