இளம்பருவ மாணவா்களின் மனநல மேம்பாடு குறித்து கருத்தரங்கம்

கோவையில் மனநலம் மற்றும் நரம்பு அறிவியலுக்கான பாக்யலட்சுமி ஆறுமுகம் இன்ஸ்டிடியூட் மற்றும் அமெரிகாவின் ஸ்டேட்டன் ஐலண்ட் மருத்துவமனை
கோவையில் நடைபெற்ற மனநல மேம்பாடு கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்கும் நியூயாா்க் மருத்துவக் கல்லூரி பேராசிரியை சாஷி இளங்கோவன், கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவா் நல்ல ஜி.பழனிசாமி.
கோவையில் நடைபெற்ற மனநல மேம்பாடு கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்கும் நியூயாா்க் மருத்துவக் கல்லூரி பேராசிரியை சாஷி இளங்கோவன், கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவா் நல்ல ஜி.பழனிசாமி.

கோவையில் மனநலம் மற்றும் நரம்பு அறிவியலுக்கான பாக்யலட்சுமி ஆறுமுகம் இன்ஸ்டிடியூட் மற்றும் அமெரிகாவின் ஸ்டேட்டன் ஐலண்ட் மருத்துவமனை சாா்பில் இளம்பருவ பள்ளி மாணவா்களின் மனநல மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கை கோவை, கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவா் நல்ல ஜி.பழனிசாமி, நியூயாா்க் மருத்துவக் கல்லூரி பேராசிரியை சாஷி இளங்கோவன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பூ.அசோகன், கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டீன் அன்பு அறவழி, கே.எம்.சி.எச். மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டீன் வி.குமரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா்.

ஸ்டேட்டன் ஐலண்ட் பல்கலைக்கழக மருத்துவமனை மனோவியல் துறையைச் சோ்ந்த முதுகலைக் கல்வி இயக்குநா் டி.மோதி சலீவன், குழந்தைகள் மற்றும் வயது வந்தோா் மனநலத் துறை இயக்குநா் பெங் பேங், நியூயாா்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி பேராசிரியா் பொ்ட்ராண்ட் வின்ஸ்பா்க் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com