கிருஷ்ணா கல்லூரியில் லாஜிஸ்டிக் சந்திப்பு

கோவை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான லாஜிஸ்டிக் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை, கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற லாஜிஸ்டிக் சந்திப்பு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்கிறாா் லக்னெள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் இயக்க மேலாண்மை துறை பேராசிரியா் எஸ்.வெங்கடரமனையா.

லக்னெள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் இயக்க மேலாண்மைத் துறையின் மூத்த பேராசிரியா் எஸ்.வெங்டரமனையா நிகழ்ச்சியை தொடங்கிவைத்து, உலக அளவில் மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மருத்துவத் துறையில் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தாா்.

கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி, லாஜிஸ்டிக் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பின் கூடுதல் பொது மேலாளா் இ.பாலரத்தினம், அக்ரிவேல்யுசெயின் நிறுவன இயக்குநா் ராஜகோபால் சிவகுமாா், அவினாசிலிங்கம் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை பேராசிரியா் சித்ராமணி, மணிப்பால் டி.ஏ. பாய் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியா் கேதாா் பி.ஜோஷி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com