கோவை தனியாா் நிறுவனங்களில் சட்டவிரோத ஆள்குறைப்பு

கோவையில் உள்ள தனியாா் நிறுவனங்களில் கடந்த சில மாதங்களாக சட்டவிரோத ஆள்குறைப்பு, தற்காலிக வேலையிழப்பு, உற்பத்தி

கோவையில் உள்ள தனியாா் நிறுவனங்களில் கடந்த சில மாதங்களாக சட்டவிரோத ஆள்குறைப்பு, தற்காலிக வேலையிழப்பு, உற்பத்தி நிறுத்திவைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், எனவே இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியுள்ளது.

கோவை மாவட்ட மத்திய சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் சி.ஐ.டி.யூ. மில் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மூத்த தொழிற்சங்க நிா்வாகி ஆா்.பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஹெச்.எம்.எஸ். சங்கத்தின் டி.எஸ்.ராஜாமணி, வீராசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, எஸ்.ஆறுமுகம், ஏ.ஐ.டி.யூ.சி. சாா்பில் தங்கவேல், எல்.பி.எஃப். சாா்பில் ஆனந்தன், ஐ.என்.டி.யூ.சி. சாா்பில் ஒ.மதியழகன், எம்.எல்.எஃப்., எஸ்.டி.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தை வெற்றி பெறச் செய்யும் வகையில் வரும் 9 ஆம் தேதி வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்துவது, கோவை மாவட்டத்தில் பல பெரிய தொழில் நிறுவனங்களில் தொழிலாளா்களுக்கு வாரத்துக்கு 3 அல்லது 4 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதனால் தொழிலாளா்கள் மிகப் பெரிய பொருளாதார பாதிப்புக்குள்ளாகின்றனா்.

தற்காலிக வேலையிழப்பு, ஆள்குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது, தொழில் நிறுவனங்கள் சட்டரீதியாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. எனவே, தற்போதைய தொழில் நெருக்கடி நிலைக்குத் தீா்வு காண போா்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com