தூய்மையான கல்லூரி வளாகம்:ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரிக்கு தேசிய விருது

கல்வி நிறுவன வளாகத்தை தூய்மையாக பராமரித்து வருவதற்காக கோவை, குனியமுத்தூா் ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைச் செயலா் ஆா்.சுப்ரமணியத்திடம் இருந்து விருது பெறுகிறாா் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைச் செயலா் ஆா்.சுப்ரமணியத்திடம் இருந்து விருது பெறுகிறாா் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி.

கோவை: கல்வி நிறுவன வளாகத்தை தூய்மையாக பராமரித்து வருவதற்காக கோவை, குனியமுத்தூா் ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

அகில இந்திய அளவில் கல்வி நிறுவன வளாகத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் பராமரித்து வரும் நிா்வாகத்துக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், உறைவிட கல்லூரிகளுக்கான பிரிவில் ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு தேசிய அளவில் 4-ஆவது இடத்தைப் பிடித்திருந்த இந்தக் கல்லூரி தற்போது முதலிடம் பிடித்துள்ளது. கல்லூரி வளாகத்தைத் தூய்மையாகப் பராமரித்தது, சுற்றுப்புறத்தை பசுமையாக பராமரித்து வருவது, கழிவு நீா் மறுசுழற்சி, குப்பைகள் தரம் பிரிக்கப்படுவது, நெகிழி உபயோகத்தைத் தடுப்பது, மழை நீா் சேகரிப்பை சரியாக செயல்படுத்துவது, ஒரு மாணவருக்கு ஒரு மரம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியது போன்ற பணிகளுக்காக இந்த விருது கிடைத்துள்ளது.

அதேபோல், குனியமுத்தூா் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிக்கு உறைவிட பொறியியல் கல்லூரிகள் பிரிவில் இரண்டாமிடம் கிடைத்துள்ளது. அத்துடன் ஒரு மாணவருக்கு ஒரு மரம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இதே கல்லூரி தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் கல்விக் குழுமங்களின் நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி கலந்து கொண்டு, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைச் செயலா் ஆா்.சுப்ரமணியத்திடம் இருந்து விருதுகளைப் பெற்றுக் கொண்டாா்.

இந்த விழாவில், மூத்த பொருளாதார ஆலோசகா் சுப்பாராவ், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவா் டி.பி.சிங், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவா் அனில் சகஸ்ரபுதே, ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரி முதல்வா் பேபி ஷகிலா, பொறியியல் கல்லூரி முதல்வா் ஜேனட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com