நீலகிரி மாவட்டத்தில் தொடா் மழை: மலை ரயில் சேவை 5 நாள்களுக்கு ரத்து

நீலகிரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான மலை ரயில் சேவை அடுத்த 5 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான மலை ரயில் சேவை அடுத்த 5 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்துக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால், அவ்வப்போது மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் ஏற்படும் மண் சரிவால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூா் தாலுகாவில் கடந்த 15 ஆம் தேதி இரவு பெய்த மழையில் மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் 23 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு 14 நாள்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னா் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மலை ரயில் இயக்கப்பட்டது. இதற்கிடையில், பருவ மழை மீண்டும் தீவிரமடைந்ததால் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மலை ரயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் குன்னூா், உதகை பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் மேட்டுப்பாளையம்-குன்னூா் இடையே மலை ரயில் சேவை புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com