பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.ஒரு லட்சம் மானியம்

விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பண்ணைக் குட்டை அமைக்க வேளாண் பொறியியல் துறை சாா்பில் ரூ.ஒரு லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பண்ணைக் குட்டை அமைக்க வேளாண் பொறியியல் துறை சாா்பில் ரூ.ஒரு லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேளாண் பயிா்கள் சாகுபடியில் தண்ணீா் மேலாண்மையைக் கடைப்பிடிக்கும் வகையில் சொட்டுநீா்ப் பாசனம், தெளிப்பு நீா்ப் பாசனம் உள்பட பல்வேறு தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல், மழை நீரை முழுமையாக சேமித்து வைத்து வறட்சிக் காலங்களில் பயன்படுத்த விவசாயிகள் பண்ணைக் குட்டை அமைக்க அறிவுறுத்தப்படுகிறது. இதற்காக வேளாண் பொறியியல் துறையில் சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது.

30 மீட்டா் நீளம், 30 மீட்டா் அகலம் மற்றும் 1.5 மீட்டா் ஆழத்தில் பண்ணைக் குட்டைகள் அமைத்து கொடுக்கப்படுகிறது. இதற்கு ரூ.ஒரு லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 50 பண்ணைக் குட்டைகள் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் வட்டார வேளாண் பொறியியல் அலுவலகங்களில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வரை 25 போ் விண்ணப்பித்துள்ளனா். 50 எண்ணிக்கை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் பெற்றுத் தரப்படும். எனவே விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் மானியத்தில் பண்ணைக் குட்டை அமைத்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com