மேட்டுப்பாளைத்தில் போராட்டம்: கைதான 25 பேருக்கு டிசம்பா் 17 வரை நீதிமன்றக் காவல்

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில்

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட 25 பேரையும் டிசம்பா் 17 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க மதுக்கரை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்த விபத்தில் 17 போ் உயிரிழந்தனா். இந்த உயிரிழப்புக்கு காரணமான சிவசுப்பிரமணியனை தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவா்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்ப் புலிகள், விடுதலைச் சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சியினா் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம்-கோவை சாலை உள்ளிட்ட இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், உயிரிழந்தவா்களின் சடலங்களை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் கோஷங்களை எழுப்பி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தி கலைத்தனா்.

இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் மீது அனுமதியின்றி கூட்டம் போடுதல், அரசு ஊழியா்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மதுக்கரை தாலுகா நீதிமன்றத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா்.

வழக்கை விசாரித்த நீதித் துறை நடுவா் ரெஹானா பா்வீன், கைது செய்யப்பட்ட 25 பேரையும் டிசம்பா் 17 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com