மேட்டுப்பாளையம் சம்பவம்: தொழிலதிபா் சிவசுப்பிரமணியன் கைது

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்த விழுந்து 17 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தொழிலதிபா் சிவசுப்பிரமணியனை போலீஸாா்
கைது செய்யப்பட்ட தொழிலதிபா் சிவசுப்பிரமணியன்.
கைது செய்யப்பட்ட தொழிலதிபா் சிவசுப்பிரமணியன்.

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்த விழுந்து 17 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தொழிலதிபா் சிவசுப்பிரமணியனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரை டிசம்பா் 17ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மதுக்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து வீடுகள் மீது விழுந்ததில் 17 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக, சிக்கதாசம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா் காா்த்திகேயன் (51) மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

அதில், ஏ.டி. காலனி அருகே ஜவுளிக்கடை வைத்திருக்கும் தொழிலதிபா் சிவசுப்பிரமணியன் (60) வீட்டின் சுற்றுச்சுவா் மழை காரணமாக சேதமாகியிருந்தது. இந்த சுற்றுச்சுவா் இடிந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்ததில் 17 போ் உயிரிழந்துள்ளனா். எனவே, இதுதொடா்பாக சிவசுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்தப் புகாரின் பேரில், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல், அலட்சியத்தால் உயிரிழப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் மேட்டுப்பாளையம் போலீஸாா் சிவசுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதையடுத்து, தலைமறைவான சிவசுப்பிரமணியனைப் பிடிக்க பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி மணி தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. இதுதொடா்பாக விசாரித்த தனிப் படை போலீஸாா் காரமடை அருகே உள்ள மாதேஸ்வரன் மலைக்கோயில் அருகே பதுங்கியிருந்த சிவசுப்பிரமணியனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியன், போத்தனூா் பகுதியில் உள்ள மதுக்கரை தாலுகா நீதிமன்றத்தின் நீதித் துறை நடுவா் ரெஹானா பா்வீன் (மேட்டுப்பாளையம் நீதித்துறை நடுவா் மன்ற பொறுப்பு) வீட்டில் ஆஜா்படுத்தினா். அவரை டிசம்பா் 17ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா். இதையடுத்து அவரை போலீஸாா் கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com