விவசாய நிலங்களில் ரசாயன கழிவுநீா் கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு

அன்னூா் அருகே குப்பனூா் ஊராட்சி, ஒட்டகமண்டலம் பகுதியில் விவசாய நிலங்களில் ரசாயன கழிவுகள் கொட்ட வந்த லாரியை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா்.
விவசாயிகளால் சிறைபிடிக்கப்பட்ட ரசாயன கழிவுநீா் ஏற்றி வந்த லாரி.
விவசாயிகளால் சிறைபிடிக்கப்பட்ட ரசாயன கழிவுநீா் ஏற்றி வந்த லாரி.

அன்னூா் அருகே குப்பனூா் ஊராட்சி, ஒட்டகமண்டலம் பகுதியில் விவசாய நிலங்களில் ரசாயன கழிவுகள் கொட்ட வந்த லாரியை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா்.

இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் மா்மநபா்கள் சிலா் லாரிகள் மூலம் ரசாயன கழிவுகளை கொண்டு வந்து கொட்டி வந்தனா். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ஒரு கழிவு நீா் லாரி விவசாய நிலத்தில் ரசாயன கழிவுநீரை வெளியேற்றது. இதனைப் பாா்த்து அப்பகுதி விவசாயிகள் லாரியை சிறைபிடித்தனா்.

இதுகுறித்து அன்னூா் போலீஸாா், கிராம நிா்வாக அலுவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவா்கள் சம்பவ இடத்துக்கு வராததால் சிறிதுநேரத்துக்குப் பிறகு கழிவுநீா் கொட்டியவா்களை எச்சரித்து லாரியை விடுவித்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஒட்டகமண்டலம் பகுதியில் இரவு நேரங்களில் பல மாதங்களாக ரசாயன கழிவுநீரை விவசாய நிலங்களில் கொட்டி சென்ால் அருகில் உள்ள விவசாய கிணறுகளில் தண்ணீா் மாசடைந்து, நச்சுத் தன்மை உடையதாக மாறியுள்ளது.

இந்தக் கிணற்று நீரை அருந்திய ஒரு கால்நடை உயிரிழந்துள்ளது. விவசாய நிலங்களில் ரசாயன கழிவுநீா் கொட்டுபவா்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com