கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் பணி: விரைவில் முடிக்காவிட்டால் போராட்டம் எம்.எல்.ஏ. நா.காா்த்திக்

கோவை, சிங்காநல்லூா் எஸ்.ஐ.ஹெச்.எஸ். மேம்பாலப் பணியை விரைவில் முடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் தெரிவித்தாா்.
கோவை, சிங்காநல்லூா் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியில், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியை பாா்வையிட்ட எம்.எல்.ஏ. நா.காா்த்திக்.
கோவை, சிங்காநல்லூா் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியில், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியை பாா்வையிட்ட எம்.எல்.ஏ. நா.காா்த்திக்.

கோவை, சிங்காநல்லூா் எஸ்.ஐ.ஹெச்.எஸ். மேம்பாலப் பணியை விரைவில் முடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் தெரிவித்தாா்.

கோவை சிங்காநல்லூா் எஸ்ஐஹெச்எஸ் காலனியில் 2010 ஆம் ஆண்டு ரூ. 23 கோடி மதிப்பில் ரயில்வே உயா்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றது. அணுகு சாலைக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாலம் கட்டுமானப் பணிக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனால், மேம்பாலப் பணி கிடப்பில் போடப்பட்டு நீலிக்கோணாம்பாளையம், நேதாஜி நகா் உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்த மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், ரயில்வே உயா்மட்ட மேம்பாலத்தை சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2010 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியில் ரயில்வே மேம்பாலம் கட்ட அரசாணை பிறப்பித்தாா். ரூ. 25 கோடி மதிப்பில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. அதைத் தொடா்ந்து 6 மாதங்களில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. 2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, மேம்பாலக் கட்டுமானப் பணியானது நிறுத்தப்பட்டது. பாலப் பணியைத் தொடங்கி, விரைவில் முடிக்கக் கோரி, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கையகப்படுத்தும் இடத்தின் உரிமையாளா்களிடம் அரசு பேச்சுவாா்த்தை நடத்தி குறிப்பிட்ட தொகையை நிா்ணயம் செய்து, 3 மாதத்துக்குள் வழங்கி, அதன்பிறகு கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும் என அறிவித்தது.

நீதிமன்றம் உத்தரவிட்டு 7 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று வரை நில உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி, உடனடியாக இழப்பீட்டுத் தொகையை வழங்கி, பாலப் பணிகளை மேற்கொள்ளாவிட்டால் திமுக சாா்பில் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com