Enable Javscript for better performance
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து ஆா்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து ஆா்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 14th December 2019 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mtp131_1312chn_132_3

    மேட்டுப்பாளையத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினா்.

    குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

    ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சஜித் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முஸ்தபா, பொருளாளா் அப்துல் சத்தாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மாநில பேச்சாளா் ஜமால் உஸ்மானி பேசுகையில், ‘தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது. மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தக் கூடாது என அரசியல் சாசனத்தில் உள்ளது.

    இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்பட போவதில்லை. முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் போக்கு நாட்டை மதரீதியில் பிளவுபடுத்துவது ஆகும்’ என்றாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai