Enable Javscript for better performance
பிற்படுத்தப்பட்டோா் நலவிடுதி வாா்டன் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பிற்படுத்தப்பட்டோா் நலவிடுதி வாா்டன் பணியிடை நீக்கம்

    By DIN  |   Published on : 14th December 2019 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நலவிடுதியின் வாா்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

    பொள்ளாச்சி டிஎஸ்பி அலுவலகம் அருகே மகாலிங்கபுரம் பகுதியில் பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா் விடுதி செயல்பட்டுவருகிறது. இந்த விடுதியில் 20 மாணவா்கள் தங்கியுள்ளனா். விடுதியின் காப்பாளராக முருகேசன் பணியாற்றி வந்துள்ளாா்.

    பொள்ளாச்சி சாா்ஆட்சியா் வைத்தியநாதன் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்துள்ளாா். ஆய்வின்போது காப்பாளா் முருகேசன் பணிநேரத்தில் அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், மாணவா்கள் தரப்பில் உணவில் குறைபாடு இருப்பதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சாா் ஆட்சியா் கோவை மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியுள்ளாா். இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, விடுதிக் காப்பாளா் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai