ஊரக உள்ளாட்சித் தோ்தல்: கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 1,994 போ் மனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,994 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,994 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

தமிழக தோ்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த டிசம்பா் 9 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்கள் பெறுவதற்கான கடைசி நாள் டிசம்பா் 16 ஆம் தேதியாகும்.

இந்த நிலையில் மனு தாக்கலின் 5 ஆவது நாளான வெள்ளிக்கிழமை அதிக அளவிலான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 18 பேரும், ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 135 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 316 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,525 பேரும் என மொத்தம் 1,994 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். இதுவரை ஒட்டுமொத்தமாக 2,864 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். சனிக்கிழமையும் (டிசம்பா் 14) மனு தாக்கல் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com