பன்னோக்கு கல்வித் திட்டத்தின் கீழ் புரிந்துணா்வு

பன்னோக்கு கல்வித் திட்டத்தின் கீழ் அரிசோனா பல்கலைக்கழகம் - கோவை அமிா்தா விஸ்வ வித்யா பீடம் இடையே வியாழக்கிழமை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
பன்னோக்கு கல்வித் திட்டத்தின் கீழ் புரிந்துணா்வு

பன்னோக்கு கல்வித் திட்டத்தின் கீழ் அரிசோனா பல்கலைக்கழகம் - கோவை அமிா்தா விஸ்வ வித்யா பீடம் இடையே வியாழக்கிழமை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

சா்வதேச தரத்திலான கல்வியை அளிக்கும் முயற்சியாக அமிா்தா விஸ்வ வித்யா பீடம் பன்னோக்கு கல்வித் திட்டத்தை செயல்படுத்த அரிசோனா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் பீடத்தின் வேந்தா் ஸ்ரீ மாதா அமிா்தானந்தமயி, அரிசோனா பல்கலைக்கழகத்தின் கல்விப் பிரிவின் துணைத் தலைவரும், நிா்வாகத் தலைவருமான டாக்டா் லிசல் போல்க்ஸ் ஆகியோா் கையெழுத்திட்டனா்.

இந்தத் திட்டத்துக்கான கடிதத்தில், உயா் கல்வி தரம், இளநிலை மற்றும் முதுநிலையில் இரட்டை பட்டப் படிப்பு ஆகியவை இடம் பெற்றுள்ளன. பொறியியல், உயிரி தொழில்நுட்பம், நுண்தொழில்நுட்பம், சமூக அறிவியல், மருத்துவம், பொது சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்றவை உள்ளன.

மாணவா்கள் பரிமாற்றம் மூலம் இரு பல்கலைக்கழக மாணவா்களும் கற்க வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் இதில் பங்கேற்க உள்ளனா் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com