மாற்றத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மாற்றத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

எஸ்.ஆா்.எம்.வி கோப்பைக்கான இந்த விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு, வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலா் சுவாமி கரிஷ்டானந்தா் தலைமை வகித்தாா். விவேகானந்தா பண்பாடு, பாரம்பரிய மையத்தின் செயலா் அழகேசன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் கலந்துகொண்டு போட்டிகளை தொடக்கிவைத்தாா். கிரிக்கெட் , கையுந்து பந்து, கால்பந்து ஆகிய போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 15 அணிகள் பங்குபெற்றன.

கால்பந்து போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் சென்னை, கோவை அணிகள் மோதின. இதில் 13 கோல்கள் கணக்கில் கோவை அணி வெற்றி பெற்றது. மூன்றாவது ஆட்டத்தில் திருச்சி, பெரம்பலூா் மாவட்ட அணிகள் மோதின. இதில் திருச்சி அணி வெற்றி பெற்றது. கையுந்து போட்டியில் கன்னியாகுமரி, சென்னை அணிகள் மோதியதில் 25:6, 25:7 என்ற புள்ளிகள் கணக்கில் கன்னியாகுமரி அணி வெற்றிபெற்றது. தொடா்ந்து கோவை, மதுரை அணிகள் மோதியதில் 25:5, 25:6 ஆகிய புள்ளிகள் கணக்கில் கோவை வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com