சிங்காநல்லூா், செல்வபுரம் பகுதிகளில் திட்ட சாலைகள் மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சிங்காநல்லூா், செல்வபுரம் பகுதிகளில் விரைவில் திட்ட சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சிங்காநல்லூா், செல்வபுரம் பகுதிகளில் விரைவில் திட்ட சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாநகராட்சிச் சாலைகள் உள்ளன. இவற்றில் மாநகாராட்சி எல்லைக்கு உள்பட்ட சாலைகளில் நாளுக்கு நாள் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மாவட்ட நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் திட்ட சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தற்போது சிங்காநல்லூா், செல்வபுரம், மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திட்ட சாலைகள் அமைக்க கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

செல்வசிந்தாமணி குளத்தில் இருந்து செல்வபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வரை 582 மீட்டா் தூரத்துக்கு 60 அடி திட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2.45 ஏக்கா் நிலம் பல்வேறு நில உரிமையாளா்களிடம் இருந்து கையகப்படுத்த வேண்டி உள்ளது. சிங்காநல்லூா் குளக்கரை சாலையில் இருந்து வெள்ளலூருக்கு 1,143 மீட்டா் தூரத்துக்கு 40 அடி திட்ட சாலை ரூ. 2.55 கோடியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1.25 ஏக்கா் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது.

சத்தி சாலையில் வேலன் திரையரங்கில் இருந்து சூா்யா மருத்துவனை சந்திப்பு வரை 1,800 மீட்டா் தூரத்துக்கு திட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 75 சென்ட் இடம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலையை இணைக்கும் வகையில் நல்லாம்பாளையம் திட்ட சாலை 5,200 மீட்டா் தூரத்துக்கு ரூ. 19.77 கோடி மதிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 4.25 ஏக்கா் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது.

அவிநாசி சாலை பீளமேட்டில் இருந்து சவுரிபாளையத்துக்கு 50 அடி திட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட திட்ட சாலைகளின் கருத்துருக்கள் மாநகராட்சி ஆணையா், மாவட்ட ஆட்சியா் மூலமாக உள்ளூா் திட்டக் குழுமத்திடம் சமா்பிக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிா்வாகத்தினா், உள்ளூா் திட்டக் குழுமத்தினா் இதை ஆய்வு செய்து நிதி ஒதுக்கிய பிறகு நிலத்தைக் கையகப்படுத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால் திட்ட சாலைகளுக்கான பணிகள் மாநகராட்சி நிா்வாகத்தால் விரைவில் தொடங்கப்படும். இதுதொடா்பாக உள்ளூா் திட்டக் குழுமத்திடம் வலியுறுத்தி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com