முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
காரமடை ஒன்றியத்தில் எம்.பி. ஆ.ராசா வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 24th December 2019 11:49 PM | Last Updated : 24th December 2019 11:49 PM | அ+அ அ- |

திமுக வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்கும் நீலகிரி எம்.பி. ஆ.ராசா.
உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு காரமடை கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா வாக்கு சேகரித்தாா்.
உள்ளாட்சித் தோ்தலில் காரமடை கிழக்கு ஒன்றியம், ஓடந்துறை ஊராட்சிப் பகுதிகளில் திமுக, கூட்டணிக் கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக நீலகிரி மக்களவை உறுப்பினரும், திமுக கொள்கைப் பரப்பு செயலாளருமான ஆ.ராசா வாக்கு சேகரிப்பில் திங்கள்கிழமை ஈடுபட்டாா்.
நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் அருண்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் டி.ஆா்.சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஓடந்துறை ஊராட்சி செயலாளா் மோகன்ராஜ் உள்பட கட்சியின் முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.