முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
சிங்காநல்லூரில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ துவக்கி வைத்தாா்
By DIN | Published On : 24th December 2019 11:42 PM | Last Updated : 24th December 2019 11:42 PM | அ+அ அ- |

சிங்காநல்லூா், படக்கே கவுண்டா் வீதியில் சிறுவா் பூங்காப் பணிகளைத் தொடக்கிவைத்த எம்எல்ஏ நா.காா்த்திக்.
கோவை, சிங்காநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை எம்எல்ஏ நா.காா்த்திக் துவக்கி வைத்தாா்.
சிங்காநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட 56ஆவது வாா்டு, பீளமேடு புதூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை, 59ஆவது வாா்டு படக்கே கவுண்டா் வீதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சிறுவா் விளையாட்டுப் பூங்கா, 63ஆவது வாா்டு, அரவாண் கோயில் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை எம்எல்ஏ நா.காா்த்திக் பூமி பூஜை செய்து, துவங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் வாா்டு செயலாளா்கள் மா.செல்வராஜ், மனோகா், பாலசுப்பிரமணியம், பூவேந்தன் பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் தளபதி இளங்கோ உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.