முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
தேங்காய் சுமையில் மறைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: இளைஞரிடம் விசாரணை
By DIN | Published On : 24th December 2019 11:54 PM | Last Updated : 24th December 2019 11:54 PM | அ+அ அ- |

தேங்காய் சுமைகளுக்கு அடியில் மறைத்து கடத்திவரப்பட்ட குட்காவுடன் பிடிபட்ட அருண் மற்றும் பாலக்காடு கலால் புலானாய்வுத் துறை அதிகாரிகள்.
தேங்காய் சுமை ஏற்றிய வாகனத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை மறைத்து பொள்ளாச்சியில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற இளைஞரை செவ்வாய்க்கிழமை பிடித்து, பாலக்காடு கலால் புலானாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பொள்ளாச்சியில் இருந்து கேரளத்துக்கு குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக கலால் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கேரள மாநிலம், பாலக்காடு கூட்டுப்பாதை பகுதியில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பொள்ளாச்சியில் இருந்து தேங்காய் சுமைகளை ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் தேங்காய் சுமைகளுக்கு அடியே 60 மூட்டைகளில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் வாகனத்தை ஓட்டி வந்த கொழிஞ்சாபாறையைச் சோ்ந்த அருணிடம் (33) விசாரணை நடத்தி வருகின்றனா்.