தென்கரையில் ரூ. 106 கோடியில் 1,200 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார்

கோவை மாவட்டம், தென்கரை மேற்குப் பகுதியில் ரூ. 106 கோடி மதிப்பில் 1,200 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை நகராட்சி நிர்வாகம், ஊரக


கோவை மாவட்டம், தென்கரை மேற்குப் பகுதியில் ரூ. 106 கோடி மதிப்பில் 1,200 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
  தென்கரை, பூலுவப்பட்டி, ஆலாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 341.99 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பணி, முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வு ஆகியவை நடைபெற்றன. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த பணிகளை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
   தென்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட கவுண்டன்பதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 8.23 கோடியில் 96 வீடுகள் கட்டும் பணி, தென்கரை மேற்கில் ரூ.106.31 கோடியில் 1,200 அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணி, பூலுவபட்டி மேட்டுவலசு பகுதியில் ரூ. 5.24 லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ஆலாந்துறை பேரூராட்சி, காளிமங்கலத்தில் ரூ. 43.47 கோடி செலவில் 516 குடியிருப்புகள் கட்டும் பணி, பச்சினம்பதியில் ரூ. 6.88 கோடியில் 80 வீடுகள் கட்டும் பணி,  மத்திப்பாளையம் முதியோர் காப்பகத்துக்கு ரூ.12.20 லட்சத்தில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி, சாந்தலிங்க அடிகளார் பள்ளிக்கு ரூ. 12 லட்சத்தில் கழிப்பிடம், நரசீபுரம் தொடக்கப் பள்ளிக்கு ரூ. 15 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 53 லட்சத்தில் உணவு பரிமாறும் இடம், நூலகம் அமைக்கும் பணி ஆகியவற்றை  பூமி பூஜை செய்து அமைச்சர் தொடங்கி வைத்தார்.
   ஆலாந்துறை கருமாரியம்மன் கோயில் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடை, வெள்ளிமலைப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை அமைச்சர் பயன்பாட்டுக்குத்  திறந்து வைத்தார்.
  மாநகராட்சி ஆணையர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜு, குடிசை மாற்று வாரிய கண்காணிப்புப் பொறியாளர் ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com