சுடச்சுட

  

  கோவில்பாளையம் அருகே அத்திப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் பொறியியல்,  தொழில்நுட்பக் கல்லூரியில் 535 மாணவர்கள் இணைந்து 2 மணி நேரத்தில் 2,855 இணையதளங்களை சனிக்கிழமை உருவாக்கி உலக சாதனை புரிந்துள்ளனர்.
  இக்கல்லூரி மாணவர்கள் உலக சாதனை முயற்சியாக குறைந்த நேரத்தில் அதிக அளவில் இணையதளங்கள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்சிக்கு கல்லூரி முதல்வர் ஆ.சஞ்சய் காந்தி தலைமை வகித்தார். 
  யுனிவர்சல் அச்சீவர்ஸ் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலாம்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் பாபு பாலகிருஷ்ணன், யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ந.செல்வம் (எ) உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நிறுவனர் நாராயணசாமி உலக  சாதனைக்கான  இந்நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தார். 
  இந்நிகழ்வு சனிக்கிழமை காலை 10 மணி அளவில் துவங்கியது. இதில் 535 மாணவர்கள் இணைந்து 2 மணி நேரத்தில் 2, 855 இணையதளங்களை உருவாக்கி உலக சாதனை புரிந்துள்ளனர். இதில், இரண்டு மாணவிகள் இணைந்து 2 மணி நேரத்தில் அதிகபட்சமாக 29 இணையதளங்களை உருவாக்கினர். 
  இதில், பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் உலக சாதனை புரிந்ததற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நந்தாஇன்போடெக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி விக்னேஷ்வரன், கணிப் பொறியியல் துறைத் தலைவர் தமிழ்ச்செல்வி, அனைத்து துறைத் தலைவர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai