கோவை பள்ளி மாணவர்கள் கர்நாடகத்துக்கு கல்வி சுற்றுலா
By DIN | Published On : 15th February 2019 09:40 AM | Last Updated : 15th February 2019 09:40 AM | அ+அ அ- |

கோவையில் இருந்து இடைநிலைக்கல்வி மாணவர்கள் 60 பேர் பிப்ரவரி 18, 19 ஆகிய இரு நாள்கள் கர்நாடக மாநிலத்துக்கு கல்விச் சுற்றுலா செல்கின்றனர்.
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், டழ்ர்த்ங்ஸ்ரீற் ர்ய் ம்ஹற்ட்ள் ஹய்க் ள்ஸ்ரீண்ங்ய்ஸ்ரீங் (தஅஅ) திட்டம் உருவாக்கப்பட்டு அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலைக்கல்வி பயிலும் 9ஆம் வகுப்பு மாணவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். அதில் கணித மற்றும் அறிவியல் மையங்களை மாணவர்கள் நேரடியாகப் பார்வையிடுகின்றனர். அதன்படி, நடப்பு ஆண்டில் கோவையில் இருந்து 60 பள்ளி மாணவர்கள் கர்நாடக மாநிலத்திலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு பிப்ரவரி 18, 19 ஆகிய இரு நாள்கள் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் 6 ஆசிரியர்கள் பாதுகாப்புக்கு செல்கின்றனர். பிப்ரவரி 17ஆம் தேதி காலை 10 மணிக்கு சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து (டவுன்ஹால்) புறப்படுகின்றனர்.
முதல்நாள் விஸ்வேஸ்வேரா இண்டஸ்ட்ரியல் மற்றும் டெக்னாலஜிக்கல் மியூசியம், எச்.ஏ.எல் ஏரோஸ்பேஸ் மியூசியம், பெங்களூரு மெட்ரோ ரயில் ஆகிய இடங்களையும், 2 ஆம் நாள் ஐ.ஐ.சி.ஏ., பெங்களூரு, விதான சவுதான் ஆகிய இடங்களையும் பார்வையிடுகின்றனர்.