கோவையில் 33 புதிய பேருந்துகள் இயக்கம்

கோவையில் பல்வேறு வழித் தடங்களில் 33 புதிய பேருந்துகள் சனிக்கிழமை இயக்கப்பட்டன.

கோவையில் பல்வேறு வழித் தடங்களில் 33 புதிய பேருந்துகள் சனிக்கிழமை இயக்கப்பட்டன.
  தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு 450 புதிய பேருந்துகள் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த ஆண்டு 215 பேருந்துகளும், கடந்த மாதம், 140 பேருந்துகளும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. மூன்றாம் கட்டமாக  ரூ. 8.25 கோடி மதிப்புள்ள 33 புதிய பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் சனிக்கிழமை இயக்கப்பட்டன. புதிய பேருந்துகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com