கோவையில் நடப்பு ஆண்டில் கூடுதலாக 525 ஏக்கரில் மல்பெரி சாகுபடி

கோவையில் நடப்பு ஆண்டில் மல்பெரி சாகுபடி 525 ஏக்கரில் புதிய நடவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

கோவையில் நடப்பு ஆண்டில் மல்பெரி சாகுபடி 525 ஏக்கரில் புதிய நடவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
   கோவை மாவட்டத்தில் அன்னுர், பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் சுற்றுப் பகுதிகளில் மல்பெரி சாகுபடி மூலம் வெண்பட்டுக்கூடு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாகுபடி பரப்பையும், பட்டுக்கூடு உற்பத்தியையும் அதிகரிக்கப் பட்டு வளர்ச்சித் துறை சார்பில் பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சொட்டுநீர் மானியம், புழு வளர்ப்பு மனை அமைத்தல், சாகுபடி தளவாடங்கள் உள்ளிட்டவற்றுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன. பட்டுக்கூடு உற்பத்தி ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகளால் தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
   இது தொடர்பாக பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் முருகானந்தம் கூறியதாவது:  கோவை சுற்றவட்டாரத்தில் ஏற்கெனவே 2 ஆயிரத்து 118 ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டிருந்தது.  இந்த நிலையில் நடப்பு ஆண்டில் இது வரை 525 ஏக்கர் புதிய நடவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 129 விவசாயிகள் பட்டு உற்பத்தியில் புதிதாக ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு புழு வளர்ப்பு மனை அமைக்க 1,000 சதுர அடிக்கு  ரூ. 63 ஆயிரம், 1000 - 1499 சதுர அடிக்கு 89 ஆயிரத்து 500 மற்றும் 1,500 சதுர அடிக்குமேல் ரூ. 81 ஆயிரத்து 500 என  வழங்கப்படுகிறது. மேலும், தளவாடங்கள் வாங்க ரூ. 52 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com