முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
என்ஜிஎம் கல்லூரியில் காந்தி பிறந்த நாள் விழா
By DIN | Published On : 28th February 2019 07:43 AM | Last Updated : 28th February 2019 07:43 AM | அ+அ அ- |

பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் காந்தியடிகள் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு, கல்லூரித் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் பாலசுப்ரமணியம், பொருளாளர் சிவகுமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகப் பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன் பங்கேற்றார். கல்லூரி முதல்வர் பழனிசாமி வரவேற்றார்.
மகாத்மா காந்தியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பை பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட்டார். மூத்த வழக்குரைஞர் சண்முகம், அறுவை சிகிச்சை மருத்துவர் கோபால்சாமி, மோட்டார் வாகன சிறப்பாளர் மூகாம்பிகா ரத்தினம், காந்தி கலை மன்ற சந்திரசேகர், நீர் ஆதார மேம்பாட்டுத் துறையின் துணைத் தலைவர் இளங்கோவன், சமூக சேவையாளர்கள் கண்ணன், இராம காரியம் அறக்கட்டளையைச் சேர்ந்த சுகுமார், வருமான வரி இலாகாவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், இயற்கை விவசாயி செல்வராஜ், லட்சுமி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் நாச்சிமுத்து ஆகியோருக்கும், ஆனைமலை காந்தி ஆசிரமம், நரிக்கல் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி, கஞ்சம்பட்டி ஊராட்சிக்கும் மகாத்மா காந்தி சமூக சேவை விருதுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 13 விருதுகள் வழங்கப்பட்டன.
இதையொட்டி நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.