முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
குழந்தையை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை
By DIN | Published On : 28th February 2019 07:44 AM | Last Updated : 28th February 2019 07:44 AM | அ+அ அ- |

மதுக்கரையை அடுத்த க.க.சாவடியில் மகளைக் கொன்றுவிட்டு தாய் கிணற்றில் விழுந்து புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
கோவை, காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மனைவி காஞ்சனாதேவி (30). இவர்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களது மகள் சாய்மதி (3). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெகதீஷுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். காஞ்சனாதேவி தனியார் நிறுவனத்தில் வேலைச் சென்று வந்தார்.
இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், க.க.சாவடி அருகே மாஸ்திகவுண்டன்பதி பகுதியில் உள்ளதனது தந்தை சின்னச்சாமி வீட்டிற்கு காஞ்சனாதேவி தனது குழந்தையுடன் செவ்வாய்க்கிழமை சென்றார். மனஉளைச்சலுடன் காணப்பட்ட காஞ்சனாதேவி தோட்டத்தில் உள்ள கிணற்றில் குழந்தை சாய்மதியை வீசியெறிந்துவிட்டு அவரும் குதித்து புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
க.க.சாவடி போலீஸார், தீயணைப்புத் துறையினர் உதவியோடு உடலைகளை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.