முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
மகாஜன அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடங்கள்
By DIN | Published On : 28th February 2019 07:41 AM | Last Updated : 28th February 2019 07:41 AM | அ+அ அ- |

மேட்டுப்பாளையம் மகாஜன அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அகில உலக அரிமா சங்கத்தின் மூலம் ஒரு லட்சம் டாலர் மதிப்புள்ள 9 வகுப்பறைகள், அலுவலகக் கட்டடம் கட்டி முடித்து கணபதி ஹோமம் நடைபெற்றது.
கோவை மாவட்ட அரிமா சங்கத்தைச் சேர்ந்த 17 சங்கங்கள் சார்பில் மேட்டுப்பாளையம் டி.கே.வி.பழனி மஹாலில் ஈடன் முல்லை மண்டல மாநாடு நடைபெற்றது. இதற்கு, மண்டலத் தலைவர் எஸ்.ராஜரத்தினம் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் அரிமா சங்கத் தலைவர் கே.செல்வகுமார், செயலாளர் பி.எஸ்.ஞானமூர்த்தி, பொருளாளர் வி.மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, விழாக் குழுத் தலைவர் பி.என்.ராஜேந்திரன் வரவேற்றார். அரிமா சங்க மாவட்ட ஆளுநர் டாக்டர் பி.கே.ஆறுமுகம் மண்டல மாநாட்டை துவக்கிவைத்தார். அரிமா சங்க அகில உலக முன்னாள் இயக்குநர் ஜி.ராமசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். முதல் துணை ஆளுநர் எஸ்.வெங்கடசுப்பிரமணியன், 2 ஆம் துணை ஆளுநர் எஸ்.தர்மராஜ் ஆகியோர் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியைத் துவங்கிவைத்தனர்.
இதில், 17 சங்கங்களின் சார்பில் பல்வேறு சேவைத் திட்டங்கள் சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டன. மேலும், மேட்டுப்பாளையம் மகாஜன அரசுப் பள்ளிக்கு அகில உலக அரிமா சங்கத்தின் மூலம் ரூ. 1 லட்சம் டாலர் மதிப்பில் 9 வகுப்பறைகள், அலுவலகக் கட்டடம் கட்டி முடிந்து கணபதி ஹோமம் நடைபெற்றது. அரிமா சங்க மாவட்ட அமைச்சரவைச் செயலாளர் குணசேகரன், அமைச்சரவைப் பொருளாளர் ரமணன், மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் பி.நவ்ரத்தன்மல் சாங்லா, ஏ.அண்ணாமலை, எம்.வின்சென்ட் வேதராஜ், என்.மனோகரன், ஏ.வேணுகோபால் ஆகியோர் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ. பழ .கருப்பையா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
விழாக் குழுத் துணைத் தலைவர் செளந்தரராஜன், பதிவுக் குழுத் தலைவர் கோகுல்தாஸ், துணைத் தலைவர் சுப்பையன். மண்டல மாநாடு இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆரோக்கியசாமி, பாலாஜி, கோபால், தமிழ்செல்வன், ஆலோசகர்கள் ஆறுமுகம், மண்டல மாநாடு செயலாளர் செந்தமிழ்ச்செல்வன், பொருளாளர் செல்வராஜன், லட்சுமிராஜா, மல்டிபிள் கவுன்சில் லியோ பொருளாளர் முகமது அலி ஜின்னா உள்பட பல்வேறு அரிமா சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.