முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
வெள்ளமலை சுரங்கப் பாதை சேதம்: சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 28th February 2019 07:40 AM | Last Updated : 28th February 2019 07:40 AM | அ+அ அ- |

வெள்ளமலை சுரங்கப் பாதையில் பல மாதங்கள் ஆகியும் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மழைக் காலத்தில் சுரங்கப் பாதை வழியாக வரும் தண்ணீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பெய்த கன மழையின்போது வால்பாறையின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், தடுப்புச் சுவர்கள் உள்ளிட்ட பல பகுதிகள் இடிந்து விழுந்து சேதங்கள் ஏற்பட்டன.
இதில், வால்பாறையை அடுத்துள்ள வெள்ளமலை சுரங்கப் பாதையும் சேதமடைந்தது. மழைக் காலத்தில் அதிக அளவிலான தண்ணீர் சுரங்கம் வழியாக வந்ததால் சுரங்கப் பாதையின் வெளிப்புறச் சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால், தண்ணீர் சீராகச் செல்ல முடியாமல் வெளியேறி வீணானது.
சுற்றுலா தலமான இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இந்நிலையில், சுரங்கப் பாதையின் பழுதடைந்த சுவர்களைச் சீரமைக்க பொதுபணித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சுரங்கப் பாதை வழியாகச் சோலையாறு அணை வரை செல்லக்கூடிய தண்ணீர் வீணாகிவிடும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.