சுடச்சுட

  

  அங்கன்வாடி மையத்துக்கு பணி மாற்றம்: துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்

  By DIN  |   Published on : 12th January 2019 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சூலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட துவக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் என்ற பெயரில் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புவதைக் கண்டித்து வட்டார கல்வி அலுவலகத்தின் முன் ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
  சூலூர் ஒன்றியத்தில் 70 துவக்கப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப பள்ளிகள் உள்ளன. இதில் 380 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் சில பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை குறைவாக உள்ளதால் அங்கு அதிகப்படியாக பணியாற்றும் ஆசிரியர்களை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து வருகின்றனர். அவ்வாறு பணியிட மாற்றம் செய்யும்போது அங்கன்வாடி குழந்தைகளை பராமரிக்க அனுப்புவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
  சூலூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் 6க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில் மூன்று ஆசிரியர்களே அங்கு உள்ளதாகவும், ஆசிரியர்களை தேவைப்படும் இடங்களுக்கு பணி மாற்றம் செய்யாமல் அவர்களது பதவிக்கு குறைவான இடங்களில் அங்கன்வாடி மையங்களில் பணியமர்த்துவதாக கூறுகின்றனர். 
  இதைக் கண்டித்து சூலூர் வட்டார கல்வி அலுவலகத்தின் முன் வெள்ளிக்கிழமை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். தமிழக அரசு ஆசிரியர்கள் கூட்டமைப்பு செயலாளர் நித்தியானந்தம், இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai