சுடச்சுட

  

  பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் உழவர் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  
  திருவிழாவை ஒட்டி கல்லூரி முதல்வர் பழனிசாமி கால்நடை கண்காட்சியை துவக்கி வைத்தார். இதில் நாட்டு மாடுகள், காளைகள், குதிரைகள், நாட்டுக் கோழிகள், ரேக்ளா வண்டி போன்றவை இடம்பெற்றன. கல்லூரியில் உள்ள கணபதி கோயிலில் முளைப்பாரி எடுக்கப்பட்டது. பின் கோமாதா வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து மாணவியர் பங்கேற்ற கும்மி, தேவராட்டம், சிலம்பாட்டம் நடந்தது. 
  நிகழ்ச்சியில் நிர்வாக மேலாளர் ரகுநாதன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முத்துக்குமரன், பல்வேறு துறைத் தலைவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உழவு பாரதம் ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணதுளசி மணி, பிருந்தா உள்பட பலர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
  பூசாரிபட்டி பொள்ளாச்சி பொறியியல் 
  கல்லூரியில்...
  பூசாரிபட்டியில் உள்ள பொள்ளாச்சி பொறியியல் கல்லூரி மற்றும் பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லூரிகள் இணைந்து தமிழ்நாடு பெயர் பொன்விழா, உழவர் திருநாள், கம்பன் விழா என முப்பெரும்விழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடினர். சிறப்பு விருந்தினர்களாக பொள்ளாச்சி நகர் மன்ற ஆணையர் கண்ணன், பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரி வெள்ளிங்கிரி ஆகியோர் பேசினர். 
  கல்லூரி தலைவர் ரத்தினம், செயலர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி  முதன்மை அதிகாரி கௌதம்சிவன், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கண்ணன், பேராசிரியகள், மாணவர்கள் பங்கேற்றனர். விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai