சுடச்சுட

    

    காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணியின்போது மாரடைப்பால் சாவு

    By DIN  |   Published on : 12th January 2019 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துடியலூரை அடுத்த ஆனைகட்டி சோதனைச் சாவடியில் பணியில் இருந்த தடாகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் திடீரென மாரடைப்பால் வெள்ளிக்கிழமை மாலை இறந்தார். 
    தடாகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன். இவர் தமிழக - கேரள மாநில எல்லையான ஆனைகட்டி சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் பணியில் இருந்துள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அருகிலிருந்த காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இவர் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரனுக்கு கஸ்தூரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai