சுடச்சுட

  

  கோவையில் வரும் 18ஆம் தேதி முதல் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்

  By DIN  |   Published on : 12th January 2019 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை மாவட்டத்தில் 122 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. வகுப்புகள் வரும் 18ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளன.
   தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் 2,381 அங்கன்வாடி மையங்களில் தமிழக அரசு சார்பில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் 122 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதில் மொத்தம் 2,748 குழந்தைகள் சேர்ந்து பயில இருப்பதாக ஏற்கெனவே கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது.
   அதன்படி ஒவ்வொரு வட்டங்களிலும் எல்.கே.ஜி. வகுப்பு தொடங்கப்பட உள்ள பகுதிகள் விவரம் வருமாறு:
  அன்னூர்: குமாரபாளையம், குன்னத்தூர் புதூர், ஏ.மேட்டுப்பாளையம், வடக்கலூர், கஞ்சப்பள்ளி, ஒரைக்கால்பாளையம், அம்போதி, அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை, செல்லப்பம்பாளையம்.
  காரமடை: காரமடை தெற்கு, எம்.கவுண்டம்பாளையம், கெண்டேபாளையம், கே.புங்கம்பாளையம், லிங்காபுரம், மூலத்துறை, பாலப்பட்டி, வேடர்காலனி, சின்னகுமாரபாளையம், சின்னதொட்டிபாளையம், வாணியர் வீதி, திம்மம்பாளையம், கோபனேரி, புதுக்காடு.
  கிணத்துக்கடவு: தாசநாயக்கன்பாளையம், சூலக்கல், கோதவாடி, மேட்டுவாடி, சிக்கலாம்பாளையம், சிங்கையன்புதூர், சொக்கனூர்.
  மதுக்கரை : அறிவொளி நகர்.
  பெரியநாயக்கன்பாளையம் 
  அறிவொளி நகர், செல்வபுரம், சாமிசெட்டிபாளையம் அண்ணா நகர், 24 வீரபாண்டி, கொண்டனூர், பெரியநாயக்கன்பாளையம் 1, ஹவுசிங் யூனிட், ராக்கிபாளையம், இடையர்பாளையம், கஸ்தூரி நாயக்கன்பாளையம், துடியலூர்.
  பேரூர்: பேரூர், குனியமுத்தூர் பால்பண்ணை வீதி, கணேசபுரம் ஜெ.ஜெ.நகர், கணேசபுரம் ரயில்வே கேட், கோணவாய்க்கால்பாளையம்.
  பொள்ளாச்சி வடக்கு: ஆலம்பாளையம், ஆச்சிப்பட்டி, வடுகபாளையம், ஆர்.கோபாலபுரம், கிழவன்புதூர், ராமபட்டணம் 1, திப்பப்பட்டி 1, கொண்டேகவுண்டன்பாளையம்.
  பொள்ளாச்சி தெற்கு
  பி.ஜி.புரம், மரபேட்டை கிழக்கு, மரபேட்டை மேற்கு, கந்தசாமி பூங்கா, அழகாபுரி கிழக்கு, ஏ.பி.டி. சென்டர், புகைவண்டி நிலையம், ஆர்.கே.நகர் மேற்கு, தெப்பக்குளம் கிழக்கு, தெப்பக்குளம் மேற்கு, வி.எஸ்.ஆர்.ஏ., கோளார்பட்டி, குண்டல்பட்டி, கட்டுப்பாளையம், செம்பகவுண்டர் காலனி, சூளேஸ்வரன்பட்டி, ஊஞ்சவேலம்பட்டி, வக்கம்பாளையம், அம்பரம்பாளையம்.
  செல்வபுரம், கோவை நகரம்
  லட்சுமணார் வீதி, எஸ்.எஸ்.கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, ஆறுமுக உடையார் தெரு, மெக்கரிக்கர் தெரு, லங்கர் கானா தெரு, கெங்குவார்லேன் சின்ன இளையான் சந்து, கெங்குவார்லேன், சங்கனூர் நாராயணசாமி லே அவுட், தனலட்சுமி ஹட்ஸ், டாடாபாத் அழகப்ப செட்டியார் சாலை, டாடாபாத் அண்ணா நகர், மசக்காளிபாளையம் மேற்கு தெரு, மசக்காளிபாளையம் பழனிசாமி தெரு, 
  எஸ்.எஸ்.குளம்: கோட்டைபாளையம், அம்மன் நகர், சின்னமேட்டுப்பாளையம், நேரு நகர், வீரியம்பாளையம், வெள்ளானைப்பட்டி, குரும்பபாளையம்.
  சுல்தான்பேட்டை: போகம்பட்டி, பாப்பம்பட்டி 1, செலக்கரைச்சல் 1, ஒடக்கல்பாளையம்.
  சூலூர்: ஆத்துப்பாளையம், மாதப்பூர், செங்கதுறை, ஊஞ்சபாளையம், முத்துக்கவுண்டன்புதூர், கணபதிபாளையம், காடுவெட்டிபாளையம், குரும்பபாளையம், வெங்கிட்டாபுரம்.
  தொண்டாமுத்தூர்: கே.கே.பாளையம் குட்டைமேடு, மாரியம்மன் கோயில் வீதி, பச்சாபாளையம், பேரூர் செட்டிப்பாளையம், ஆறுமுககவுண்டனூர், வடவள்ளி அண்ணா வீதி, காமராஜர் வீதி, வடவள்ளி இந்திரா நகர், முண்டந்துறை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai