சுடச்சுட

  

  "சமூக வலைதளங்களில் மாணவர்கள் அதிக நேரத்தை செலவிடக் கூடாது'

  By DIN  |   Published on : 12th January 2019 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சமூக வலைதளங்களில் மாணவ, மாணவியர் அதிக நேரத்தை செலவிடக் கூடாது என்று கோவை மாநகர காவல் துணை ஆணையர் எல்.பாலாஜி சரவணன் கூறினார்.
   கோவை எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 33ஆவது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எஸ்.பி.ஓ.ஏ. அறக்கட்டளையின் தலைவர் ஆர். பாலாஜி தலைமை வகித்தார். செயலர் ஜி. செல்வராஜ் தொடக்க உரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக காவல் துணை ஆணையர் எல். பாலாஜி சரவணன் பங்கேற்றுப் பேசியதாவது:
  குழந்தைகளை நல்ல ஆற்றலுடன் வளர்க்க வேண்டும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு நல்ல விழிப்புணர்வூட்டி வளர்க்க வேண்டும். பெண் குழந்தைகள் சக நண்பர்களோடு புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புகைப்படம் வைத்து யாரேனும் மிரட்டினால் அது தொடர்பாக காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் கற்பனை வாழ்க்கையிலிருந்து நிஜ வாழ்க்கைக்கு வர வேண்டும். மாணவர்களின் திறமைகளை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
   மாணவர்கள் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிடக் கூடாது. மாறாக விளையாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது உடல் ஆரோக்கியத்துக்கும் மன ஆரோக்கியத்துக்கும் நல்லது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்யக் கூடாது என்றார்.
   பள்ளியின் தாளாளர் ஆர்.ராஜவேலு வெற்றி பெற்ற மாணவ, மாணவிருக்கு பரிசுகள் வழங்கினார். பொருளாளர் சி.பாலாஜி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.செல்வகுமார், முதல்வர் கீதா கோபிநாத், உடற்கல்வி இயக்குநர் எ.கிறிஸ்டோபர் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
   இதைத் தொடர்ந்து மாலையில் பள்ளியின் 33ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கே.எம்.சி.எச். தலைவர் நல்ல ஜி.பழனிசாமி, டி.ஐ.ஜி. கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai