சுடச்சுட

  

  கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
   கோவை, சித்தாப்புதூரைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி பிரேமா (57). இவர், பீளமேடு செல்வதற்காக பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் சாலையில் வியாழக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பிரேமாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
   அப்போது, பிரேமா கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞரைத் துரத்திப் பிடித்து அடித்து காட்டூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், நகைப் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சிவா (34) என்பது தெரியவந்தது. இவர் கோவை நூறடி சாலையில் உள்ள ஒரு நகைக் கடையில் காவலாளியாகப் பணியாற்றி வருவது தெரியவந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai