சுடச்சுட

  

  மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் மற்றும் மெட்ரோ மெட்ரிக். பள்ளி இணைந்து நடத்திய பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  பள்ளி தாளாளர் நாகராஜன் தலைமை வகித்து பேரணியை துவங்கி வைத்தார். பள்ளி குழு தலைவர் பாலகோபால் முன்னிலை வகித்தார். அபிராமி திரையரங்கு அருகே தொடங்கிய பேரணி கோவை-மேட்டுப்பாளையம் சாலை வழியாகச் சென்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு கையில் விழிப்புணர்வுப் பாதகைகளை ஏந்திச் சென்றனர்.  முன்னதாக ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வழக்குரைஞர் வீராபத்திரன் சிறப்புரை ஆற்றினார். ரோட்டரி சங்க செயலாளர் முத்துசாமி, முன்னாள் தலைவர் ஸ்டீபன், முன்னாள் செயலாளர்கள் டாக்டர் விஜியகிரி, சித்துராம்பாபு, துணை முதல்வர் கிருஷ்ணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் சுலோச்சனா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai