சுடச்சுட

  

  பொள்ளாச்சியில் இருந்து வெளியூர்களுக்கு 10 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்

  By DIN  |   Published on : 12th January 2019 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொள்ளாச்சி கோட்டத்துக்கு உள்பட்ட 10 புதிய பேருந்துகளை சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
  நிகழ்ச்சிக்கு நகர் மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், அர்பன் வங்கித் தலைவர் விஜயகுமார், தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி கோட்டத்துக்கு புதிதாக வழங்கப்பட்ட 10 அரசுப் பேருந்துகளை சட்டப் பேரவைதுணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
  இதில் பொள்ளாச்சியில் இருந்து மதுரை, பழனி, புதுக்கோட்டைக்கு தலா ஒரு பேருந்தும், தேனி, திருப்பூருக்கு தலா 2 பேருந்துகள், சேலத்துக்கு 3 பேருந்துகள் இயக்கப்பட்டன. 
  உடன் அதிமுக நிர்வாகிகள் ஜேம்ஸ் ராஜா, குருசாமி, சக்திவேல், டி.எல்.சிங், வீராசாமி, வழக்குரைஞர் தனசேகர், நீலகண்டன், அருணாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai