பொங்கலையொட்டி 2 ஆம் ஆண்டு தமிழர் திருவிழா

கோவையில் நயம் எக்ஸ்பீரியன்ஸ் அமைப்பு சார்பில் பொங்கல் விழாவையொட்டி ஜனவரி 15 முதல் 17 ஆம் தேதி வரையில் மூன்று நாள்களுக்கு தமிழர் திருவிழா நடைபெறுகிறது.

கோவையில் நயம் எக்ஸ்பீரியன்ஸ் அமைப்பு சார்பில் பொங்கல் விழாவையொட்டி ஜனவரி 15 முதல் 17 ஆம் தேதி வரையில் மூன்று நாள்களுக்கு தமிழர் திருவிழா நடைபெறுகிறது.
 இது குறித்து அமைப்பின் நிர்வாகிகள் மார்க்ரேட், கிளாரா, விஜயலட்சுமி, கங்கா தேவராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கோவை கொடிசியா மைதானத்தில் ஜனவரி 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையில் தமிழர் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, நாட்டு மாடு, நாய், சண்டை சேவல், குதிரை, காளைகள் கண்காட்சி நடைபெறுகிறது. மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான சடுகுடு, உரியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், இளவட்டக்கல் தூக்குதல் ஆகியப் போட்டிகள் நடைபெறுகின்றன.
 பெண்களுக்கான 5 கல் விளையாட்டு, நொண்டி, பல்லாங்குழி, பொங்கல் வைத்தல், கோலம் போடுதல், மண்பாணை செய்தல், பூ கட்டுதல், அம்மியில் அரைத்தல், உலக்கையில் அரிசி குத்துதல் ஆகியப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதே போல கிராமியக் கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை,  பொம்மலாட்டம், சிலம்பாட்டம், தெருக் கூத்து, நாட்டுப்புற நடனம், தவில், வில்லுப்பாட்டு, பறையடித்தல், கும்மி ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
 மேலும் குழந்தைகளுக்கான சிறு விளையாட்டு போட்டிகளும், பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கோலப்போட்டி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் மாட்டு வண்டி சவாரி, குதிரை வண்டி சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com