சுடச்சுட

  

  கோவை விழாவையொட்டி பழங்கால கார் கண்காட்சி, ஓவியச் சந்தை

  By DIN  |   Published on : 13th January 2019 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கோவை விழாவையொட்டி பழங்கால கார் கண்காட்சி மற்றும் ஓவியச் சந்தை நடைபெற்றது.
  கோவை விழாவையொட்டி சத்தி சாலையில் உள்ளி புரோசோன் வணிக வளாகத்தில் இரண்டு நாள் பழங்கால கார் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இக் கண்காட்சி பிற்பகல் 2 மணி முதல் 7 மணி வரையில் நடைபெறுகிறது. 
  இதில் கோவை, பல்லடம், திருப்பூர், அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இதில் சுமார் 25 பழைய மாடல் கார்கள் மற்றும் 8 பைக்குகள் இடம்பெற்றுள்ளன.
  சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய கார்கள் முதல் 1980 ஆம் ஆண்டு வரையுள்ள பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
  பழைய மாடல் பென்ஸ், செவர்லே, ஃபோர்டு, வோக்ஸ்வேகன், பழைய ஜீப் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதே போல உலகப் போர் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட புல்லட்டுகள், எச்டி மற்றும் ஜாவா உள்ளிட்ட பைக்குகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
  இதேபோல கலை ரசிகர்களும், ஓவியக் கலைஞர்களையும் ஒருங்கிணைக்கும் விதமாகத் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற ஓவியச் சந்தையை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சுஜித்குமார் சனிக்கிழமை துவங்கி வைத்தார். இதில் சுமார் 100 ஓவியர்கள் தங்களின் ஓவியங்களைக் காட்சிப் படுத்தியுள்ளனர். 
  கொங்கு மண்டலம் மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஓவியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஓவியச் சந்தையில் தங்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்த வயது வரம்பு கிடையாது என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினைச் சேர்ந்தவர்களும் தங்களின் ஓவியங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai