வால்பாறை அருகே யானைகள் முட்டித் தள்ளியதில் 3 வீடுகள் சேதம்

எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள் அங்குள்ள குடியிருப்புகளை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.

எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள் அங்குள்ள குடியிருப்புகளை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.
வால்பாறையை அடுத்த நீராறு அணை, சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு உள்ளிட்ட எஸ்டேட்களை ஒட்டியுள்ள வனத்தில் ஏராளான யானைகள் உள்ளன. யானைகள் வனத்தை விட்டு வெளியேறி பல்வேறு சேதங்களை ஏற்படுத்துவது வழக்கமாகி விட்டன.  இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நீராறு அணையை ஒட்டி அமைந்துள்ள பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த யானைகள் மூன்று குடியிருப்புகளை முட்டித் தள்ளி சேதப்படுத்தின. 
இக்குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வெளியூர் சென்றுவிட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. 
சேதமடைந்த பகுதிக்கு புதன்கிழமை சென்று பார்வையிட்ட வனத் துறையினர் அங்கேயே முகாமிட்டு யானைகள் மீண்டும் அங்கே வருவதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com