சுடச்சுட

  

  உலகின் முதல் விஞ்ஞானி உழவன்: மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

  By DIN  |   Published on : 02nd July 2019 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உலகின் முதல் விஞ்ஞானி உழவன் என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
  சூலூர் அருகே அரசூரில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி  அண்மையில் நடைபெற்றது. 
    இக்கண்காட்சியை எல்.எம்.டபுள்யூ துணைத் தலைவர் வி.வேனுகோபல், கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி முதன்மைச் செயலாளர் எம்.நடராஜன், கல்லூரி முதல்வர் கே.பொம்மண்ணராஜா, கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பாலுசாமி, இயந்திரவியல் துறைத் தலைவர் எஸ். குணசேகரன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
   இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு 600 படைப்புகளை காட்சிக்கு வைத்தனர்.
   9,10 ஆம் வகுப்பு மாண்வர்களுக்கு ஒரு பிரிவாகவும், 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் புதிய தொழிநுட்பம், சமூக முன்னேற்றம் , சூரிய ஓளி மின்சார தயாரிப்பு சனிக்கிழமை அறிவியல் கண்காட்சியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பரிசுகள் வழங்கிப் பேசியதாவது:
   உலகத்தின் முதல் விஞ்ஞானி உழவன்தான். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையாக இருந்த நமது கலாசாரத்தில் அந்நிய பழக்கவழக்கத்தின் மோகத்தால் இயற்கைக்கு பேரிடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. நாம் தற்போது இயற்கையை பாதுகாக்க வேண்டிய சூழலில் உள்ளோம். மூளைக்கு அதிக வேலை கொடுத்தால் மாணவர்கள் எதிர்காலத்தில் விஞ்ஞானியாகலாம் என்றார்.
   கண்காட்சியின் தொடக்க விழாவில் கே.பி.ஆர். கல்விக் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் நடராஜன் கலந்துகொண்டார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai